Categories
சினிமா

அஜித்தின் வலிமை…. படத்தின் சில தகவல் கசிவு…. உண்மையை உடைத்த ஹூமா குரேஷி….!!!

அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து சில தகவல்களை நடிகை ஹூமா குரேஷி கூறியுள்ளார்.

நடிகை ஹூமா குரேஷி “வலிமை” திரைப்படத்தை பற்றி பாலிவுட்டில் கூறியிருக்கிறார். இவர் அண்மையில் வட இந்திய மீடியாவுக்கு பேட்டி அளித்தபோது நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகை நான் , அவருடன் இணைந்து வலிமை படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். சென்ற இரண்டு வருடங்களாக நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் வெளிவராததால்  ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என ஆர்வத்துடன் இருகின்றனர். வலிமை படம் சென்ற ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால் கொரானாவின் தாக்கத்தினால் திரைப்படம் வெளியாக வில்லை. தற்போது வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தின் மூலம்  ஹூமா குரேஷி அறிமுகமானார். தற்பொழுது இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பாலிவுட்டிற்கு கொண்டு செல்ல முயல்கிறார் ஹீமா குரேஷி. இவர் வட இந்தியாவில் உள்ள ஒரு ஊடகத்துக்கு பேட்டியளித்தபொழுது நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகை. நான் அவருடன் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். அப்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் வலிமை படம் குறித்தும் அத்திரைப்படத்தில் உங்களின் கதாபாத்திரம் குறித்து கூறுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு ஹீமா குரேஷி சிரித்தபடி எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இருக்கும் மற்றும் இப்படத்தில் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்ற தகவலை மட்டும் கசிய விட்டு இருக்கிறார். இத்திரைப்படத்தில் உலகத்தர சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ட்ரெய்லரில் பார்த்ததெல்லாம் ஒன்றுமில்லை படத்தில் மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது” என ஹீமா குரேஷி கூறியது ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |