தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது மனைவியுடன் அஜித், ஷாலினி ,மகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அஜித். இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அஜித், ஷாலினி, மகள் அனௌஷ்காவுடன் சேர்ந்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு… அவருடன் இருக்கும் பொழுது இருக்கும் எனர்ஜியை சொல்ல முடியாது. அவரை வியந்து பார்க்கிறேன் என கூறியுள்ளார்.