கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரியவந்துள்ளது
தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏப்ரல் 23 வரை ஆன்லைன் மூலமாக வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும், வழக்கறிஞர்கள் அறை, நூலகம் போன்றவை தேதி அறிவிக்காமல் மூடப்படும் என்றும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.