பிரபல நாட்டில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை தற்போது கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாலை வழியாக இன்று காலை வந்த 2 பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு நெடுஞ்சாலையின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “தற்போது நிலவிவரும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சாலை பகுதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.