பிரபல நாட்டின் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உள்ள வென்பெங்க் மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பருத்தி மீது பற்றி ஆலை முழுவதும் பரவியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.