Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… திருவிழாவில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்…. எதற்கு தெரியுமா?… வைரலாக பரவும் வீடியோ….!!!!

கோவில் திருவிழாவில் தேர் சரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா என்ற கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான கோவிலின் தேர் ஊருக்குள் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த தேர்த் திருவிழாவை காண பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தேர் கோவிலை சுற்றி வந்த சிறிது தூரத்தில் அதன் சக்கரம் முறிந்து சரிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்த பக்தர்கள் முன்னெச்சரிக்கையாக அது பற்றி தெரிந்ததும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |