மொரோனியில் இருந்து போம்போனி நகருக்கு 14 பேருடன் சென்று விமானம் விபத்துக்குள்ளானது.
தலைநகர் மொரோனியில் இருந்து நேற்று 14 பேருடன் ஏர்லைன் ஏபி ஏவியேஷனின் சிறிய வகை விமானம் ஒன்று மொஹேலி தீவில் உள்ள போம்போனி நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் தனது பாதையிலிருந்து விலகி திடீரென மாயமானது. இது குறித்து தகவல் அறிந்ததும் விமானத்தை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
அந்த வகையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் டிஜோய்சியின் கடலோரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லியோனின் போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் 12 பயணிகள் கொமோரியாவை சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு விமானிகள் தான்சானியாவை சேர்ந்தவர்கள் என்றும் கொமோரியன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது. “விமானம் விழுந்த இடத்தில் மூன்று படகுகளுக்கு மேல் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.