சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல வருடங்களாக ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அர்ஜுன் சார் மற்றும் ரோஜா கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சீரியலில் அர்ஜுனாக நடிக்கும் நடிகர் சிப்பு சூரியன் இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று தான் ரோஜா சீரியலின் கடைசி நாள். அர்ஜுன் சாராக என்னுடைய பயணம் இன்றோடு முடிவடைகிறது. எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு நன்றி. என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் சிப்புவின் உருக்கமான பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram