குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாகரீக மனித இனமாகும் பெரும்பாலும் குரங்கு செய்யும் சேட்டைகள் சில சமயங்களில் நகைச்சுவையாக தான் இருக்கிறது உணவு என்பது அனைத்து வகையான உயிர்களுக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தனது உணவு பறிபோகும் போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்குமோ அப்படித்தான் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு குரங்கின் உணவு பறிபோகும் அதன் ரியாக்சன் நகைச்சுவையாகவும் அதே சமயம் பார்ப்பதற்கு பாவமாகவும் இருக்கிறது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் யோக் என்னும் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
https://twitter.com/i/status/1581293819773034496
அதில் நீர் நிரம்பிய குளம் போன்ற ஒரு இடத்தின் அருகே குரங்கு ஒன்று கையில் வாழைப்பழத்தை வைத்து அமர்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் அந்த குரங்கானது ஆசை ஆசையாக அந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதற்காக கொண்டு வந்து அதனை உரித்து கொண்டு இருக்கிறது. அப்போது திடீரென அந்த குரங்கு கையில் இருந்த பழம் நழுவி அந்த தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. குரங்கின் கையில் தனது வாழைப்பழத் தோலை மட்டும் வைத்துக்கொண்டு அப்பாவியாக இருக்கிறது. அதன் பின் அந்த குரங்கு மனம் உடைந்து அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறது இந்த வீடியோவானது பலரது கவனங்களை ஈர்த்துள்ளது. மேலும் இந்த நகைச்சுவை வீடியோ ஏற்படுத்தியதை விட குரங்கின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. தற்போது இந்த வீடியோவிற்கு பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.