நடிகர் அசோக்செல்வன் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தொகுப்பாளினியாகவும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும் அறிமுகமாகிய பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இதன் பின்னர் அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது . இவர் நடிகர் கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் ,எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்திலும், அருண் விஜய்யின் ‘மாஃபியா’ படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் நடிப்பில் குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், ஓமணப்பெண்ணே ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது.
இதையடுத்து இவர் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கயிருக்கிறார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக ஆர். ரவீந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மேலும் சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார் . இந்த படத்தில் நாசர், யோகி, முனீஸ்காந்த் ,ரவி மரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . விரைவில் இந்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.