அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘அடி கேப்யாரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ஹாஸ்டல் படம் உருவாகியுள்ளது.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பாபோ சசில் இந்தப் படத்துக்கு இசையமைக்க, அப்சர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்பொழுது படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துவருகிறது.