காந்தியடிகள் அமரத்துவ தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசாணையின்படி மகாத்மா காந்தியடிகள் அமரத்துவ தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. அதனை மீறி செயல்பட்டால் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரப் பிரிவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.