Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அசைவப் பிரியர்களே… இறைச்சி மற்றும் மீன் கெட்டுப் போகாமல் இருக்க… இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

இறைச்சி, மீன் போன்றவற்றை கெட்டுப்போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

இறைச்சி மற்றும் மீனை பாலிதீன் கவர்களில் வைத்து பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும். சமைக்காத அசைவ  பொருளையும், சமைத்த அசைவ பொருளையும் சேர்த்து வைக்ககூடாது. சமைக்காத இறைச்சியை  மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதை டிபுரோஸ்ட் செய்ய பிரிட்ஜின் உள்ளேயே வைப்பது நல்லது. அதாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து பிரிட்ஜின் அடியில் உள்ள அறையில் 24 மணி நேரம் வைத்திருந்தால் டிபுரோஸ்ட்  ஆகிவிடும். பிரிட்ஜில்  இருக்கும் இறைச்சியை அப்படியே எடுத்து சுடுநீரில் அல்லது குளிர்ச்சியை குறைக்க வெகுநேரம் வெளியே எடுத்து வைத்தால் அந்த உணவுப் பொருள் கெட்டுப் போக வழிவகுக்கும்.

மாமிசம், மீன் போன்றவற்றை கூடுதல் நாட்கள் வைத்து பயன்படுத்த விரும்புவர்கள் அதை துண்டு துண்டாக வைத்து தனித்தனி கவரில் அடைத்து வைப்பது சரியான வழி. அன்றை அன்றைய தேவைக்கு மட்டும் ஒரு கவரில் இருப்பதை எடுத்து பயன்படுத்த வேண்டும். பிரிட்ஜில் வைத்து இருக்கும் சமைத்த உணவை எடுத்து சூடாகும் போது அதிலிருந்து ஆவி வரும் வரை சமைக்க  வேண்டும். அப்போதுதான் இதிலிருக்கும் தொற்றுகள் அழியும். வெறும் பெயருக்கு சூடாகி சாப்பிட்டால் அது விஷத்தன்மை கொண்ட உணவாக மாறிவிடும். முடிந்த அளவு உணவினை சமைத்து சூடாக சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Categories

Tech |