அசுத்தமான நீர் கலந்த குடிநீர் கிணற்றை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் காந்தி நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மக்கள் அளித்த புகாரின் பேரில் அரசாங்கம் ஜே.ஜே. எம். திட்டத்தின் மூலம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கிணற்றின் மேல் மூடி இல்லாத காரணத்தால் கிணற்றின் தரைதளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தக் கிணற்றில் நச்சு நீர் கலந்துள்ளது. இந்த அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழுது அடைந்து கிடக்கும் கிணறை சீரமைத்து சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.