73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார்.
முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி முரளிதரனின் சாதனையை முந்தியுள்ளார் அஷ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 375 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில், முதல் நிலை பேட்ஸ்மேனான ஸ்மித்துக்கு தனது பந்து வீச்சின் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார் அஷ்வின். ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் பந்து வீச்சில் அசத்தி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த அஷ்வின்.
🗣 "'Jinks' calmness in the dressing room really provided us that stability to go out there and express ourselves in this game."
– Ravi Ashwin chats with @alisonmitchell about India's win and his plans against Steve Smith #AUSvIND pic.twitter.com/n1eIbLXQp8
— 7Cricket (@7Cricket) December 29, 2020