Categories
மாநில செய்திகள்

அசத்தும் ஆவின்…! புதிதாக 10 பால் பொருட்கள் அறிமுகம்…. என்னென்ன தெரியுமா….???

ஆவினில் புதிதாக கோல்டு காஃபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகிய 10 பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய அறிமுகம் வரும் 20 ஆம் தேதி முதல் ஆவின் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

இந்த 10 புதிய பால் உபபொருட்களும் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையிலும் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. தயார் நிலையில் உள்ள இந்த புதிய பால் உபபொருட்கள் விற்பனையை அமைச்சர் நாசர், நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் வரும் 20ம் தேதி அறிமுகப்படுத்துகிறார்.

Categories

Tech |