Categories
டெக்னாலஜி

அசத்தல் அம்சங்களுடன் iPhone 14 pro சீரிஸ் அறிமுகம்…. முன்பதிவு ஆரம்பம்….!!

Apple நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max மாடல்கள் முற்றிலும் புதிய ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. இது கிராஷ் டிடெக்‌ஷன் மற்றும் செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி SOS வசதியை கொண்டுள்ளது. புதிய iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ப்ரோ மோஷன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. iPhone-ல் முதல் முறையாக ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புது iPhone-களிலும் செராமிக் ஷீல்டு முன்புற கவர் வழங்கப்பட்டு உள்ளது.

iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max அம்சங்கள்:

6.1 இன்ச் 2566×1179 பிக்சல் OLED 460ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே – iPhone 14 pro

6.7 இன்ச் 2796×1290 பிக்சல் OLED 460ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே – iPhone 14 pro max

128 gb, 256 gb, 512 gb, 1 டிபி memory ஆப்ஷன்கள்

6-கோர் ஏ16 பயோனிக் பிராசஸர்,

ஐஒஎஸ் 16 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68),

டூயல் சிம், 48MP வைடு ஆங்கில் கேமரா, 12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு 2-வது கேமரா,12MP 3x டெலிபோட்டோ கேமரா, 12MP ட்ரூ டெப்த் செல்பி கேமரா,

5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3

லித்தயம் அயன் பேட்டரி

15 வாட் மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங், பாஸ்ட் சார்ஜிங்.

விலை விவரங்கள்:

Apple iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max மாடல்கள் ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்டு மற்றும் டீப் பர்பில் நிறங்களில் கிடைக்கின்றன.

iPhone 14 pro 128 ஜிபி-ரூ. 1, 29, 900.

iPhone 14 pro 256 ஜிபி-ரூ. 1, 39, 900

iPhone 14 pro 512 ஜிபி-ரூ. 1, 59, 900

iPhone 14 pro 1 டிபி-ரூ. 1, 79, 900

iPhone 14 pro max 128 ஜிபி-ரூ. 1, 39, 900

iPhone 14 pro max 256 ஜிபி-ரூ. 1, 49, 900

iPhone 14 pro max 512 ஜிபி-ரூ. 1, 69, 900

iPhone 14 pro max 1 டிபி-ரூ. 1, 89, 900

iPhone 14 pro சீரிஸ் மாடல்களின் முன்பதிவு இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. விற்பனை september 16 ஆம் தேதி துவங்குகிறது.

Categories

Tech |