மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தே மருந்துகள் வாங்கலாம்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நோயாளிகளுக்கு இலவச மொபைல் ஆப் மூலம் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. நோயாளிகளுக்கு மருந்து சீட்டை மருத்துவர்கள் எழுதி தருவதற்கு பதிலாக மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் கையெழுத்துடன் மருந்து விவரங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டில் இருந்த படி சிகிச்சை விவரங்களை பெற்று கொள்ளலாம்.
மொபைல் அப்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை விவரம், நோயின் தன்மை எந்த நேரத்தில் எந்த மருந்து உட்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட தகவல்கள் அடங்கியிருக்கும். எந்த பகுதியில் இருந்தாலும் டிஜிட்டல் முறையில் மருத்துவரை தொடர்பு கொண்டு மருந்துகளை பெறலாம். தற்போது ஆன்லைனில் மருந்துகளும் விற்கப்படுவதால் டிஜிட்டல் மருந்து சீட்டுகளை பயன்படுத்தி வீட்டிலிருந்த படியே மருந்துகளை வாங்க முடியும்.