Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தலாக வெளியான சிம்பு பட டைட்டில் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது .

இந்த படத்தில் சிம்புவுடன் இளம் நடிகரான கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளார். கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான முப்தி என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படம் . இன்று இந்த படத்தின்  டைட்டிலை பிரபல இயக்குனர்கள் வெங்கட் பிரபு ,விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித் ,சந்தோஷ் ஜெயக்குமார் ,விஜய்மில்டன் ,அஷ்வத், சாம் ஆண்டன், எம். ராஜேஷ் ஆகியோர் அறிவித்துள்ளனர் . இந்த படத்திற்கு ‘பத்து தல’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டைட்டில் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |