கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தி.மு.க பிரமுகரின் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் தி.மு. க பிரமுகரான பெர்னார்டு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பெர்னார்டின் வீட்டிற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் கள்ளத் துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறிய போது, புகார் வந்ததன் அடிப்படையில் தி.மு. க பிரமுகரின் வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் கள்ளத்துப்பாக்கி எதுவும் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்.