Categories
தேசிய செய்திகள்

அங்கே “டமால் டுமீல்”…. இங்கே “டும் டும்”…. ட்ரெண்டிங்கில் மணமக்கள்…. ருசிகர சம்பவம்…!!!

உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே அனல்பறக்கும் யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு பெண்ணை ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் வித்தியாசமாக நடைபெற்றது. ஏனெனில் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த வந்த அனைவரும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் உக்ரைன் போர் நிற்க வேண்டும் என்று நினைத்து மனதார வேண்டிக் கொண்டனர். இவர்களது திருமணம் உக்ரேனில் வைத்து இந்திய முறைப்படி மாப்பிள்ளை பிரதீக் மல்லிகார்ஜூன ராவ் தாலி கட்டி லியுபோவை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு தெலங்கானா மாநிலம் சில்கூரில்  நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிவடைந்ததையடுத்து உக்ரேனில் போர் வெடித்தது. இதனால் மணமக்கள் அங்கிருந்து வெளியேறி ஹைதராபாத்துக்கு செல்வதற்கு முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து இருவரும் இந்தியா வந்தனர். பின்னர் இருவருக்கும் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நடத்த மாப்பிள்ளை வீட்டார் முடிவு செய்தனர். இந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் தம்பதியரின் நலனுக்காகவும், உக்ரைனின் நலனுக்காகவும் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்திக் கொண்டு மணமகளை ஆசீர்வதித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்கள் சிலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிலையில் உக்ரைனில் திருமணத்தை முடித்து போர் சூழலில் அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்த இந்த தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |