அக்டோபர் 30ஆம் தேதி 7ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிறு கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி (சனிக்கிழமை) ஏழாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள் தான் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்றார்..
மேலும் 11 மருத்துவ கல்லூரிகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர நாளை டெல்லியில் கோரிக்கை வைக்கவுள்ளேன். 1,650 இடங்களில் 850 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைக்க நிதி வழங்க கோரியும் நாளை கோரிக்கை வைக்கப்படும் என்று கூறினார்.