நாடு முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த வகையில் ஏஐசிடிஇ தேர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.