ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல இடங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் பட்டு வருவதால் அரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் போராட்டத்தை நிறுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.