சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கான தடை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக சில தளர்வுகளை கொண்டுவந்தன.இதனையடுத்து ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.எனினும் கேளிக்கை விடுதிகள்,பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறை செய்வது, கடற்கரையை சுத்தப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டுமென வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் தள்ளுவண்டி விற்பனையை திரும்பவும் தொடங்க அனுமதி வேண்டுமெனவும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனடிப்படையில் கொரோனா நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையானது அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுமென்று சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.