Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அக்டோபர் 29ஆம் தேதி இரவு மதுரை புறப்படும் முதல்வர் ஸ்டாலின், 30 ஆம் தேதி காலை 9 மணிக்கு பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவார்.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி அக்., 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |