Categories
மாநில செய்திகள்

அக்டோபர் மாதம் முதல்….. இனி இந்த கிழமைகளில் தடுப்பூசி முகாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 50,000 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமை நடத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தகுதி உள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக புதன்கிழமை இனி தடுப்பூசி முகாம் நடைபெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |