பஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானிய குழு ஊதிய விகிதங்களை தனது அரசு அமல்படுத்தும் என முதல்வர் பகவந்த் மான் அவர்கள் திங்கட்கிழமை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அரசு கல்லூரிகளில் கௌரவ ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தன்று அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் பஞ்சாபில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 1, 2022 முதல் பல்கலைக்கழக மானிய குழு 7வது ஊதிய குழு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
யுஜிசி ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது பஞ்சாபில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. மேலும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரிகளிலும் கௌரவ ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலும் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் பகவந்த் மான் வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18 முதல் 20 வருடங்களாக கல்லூரியில் கற்பித்து வரும் கௌரவ ஆசிரியர்களின் ஊதியமும் உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வை பற்றி அறிவிப்பை எதிர்பார்த்து வந்த ஆசிரியர்களுக்கு அரசு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழாவது ஊதிய குழுவின் படி அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வானது வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.