Categories
மாநில செய்திகள்

அக்டோபரில் மீண்டும் சந்திப்போம்…. ஒற்றுமையாக செயல்படுங்க…. ஸ்டாலின் போட்ட கண்டிஷன் …!!!

அனைத்துத்துறை செயலாளர்கள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவித்த திட்டங்கள் குறித்தும், 110 விதியில் அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்துவதற்கு கால நிர்ணயம் செய்து கொள்ளுங்கள், அந்த காலத்திற்குள் நிறைவேற்றுங்கள்.

அமைச்சர்களும், அதிகாரிகளும் இணைந்தே செயல்படுங்கள். இணைந்து செயல்படுவதன் மூலமாக வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி தாருங்கள்  என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். அனைத்துதுறையும் ஒருசேர வளரவேண்டும். ஒரு துறை  முன்னேறியது, சுறுசுறுப்பாக செயல் பட்டது என்று சொல்லாமல் அனைத்து துறைகளிலும் ஒரு சேர முன்னேற்றம் கண்டது என்ற சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியன உங்களுடைய என்னோட்டமாக இருந்திட வேண்டும். இந்த சிந்தனை அனைத்து துறை செயலாளர்களுக்கு ஏற்படுமானால் தமிழகத்தின் எதிர்காலம் என்பது இந்தியாவினுடைய தலைசிறந்ததாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதற்க்கு நீங்களெல்லாம் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இன்னொரு விஷயத்தையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.  அரசு துறைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்காமல், ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் செம்மையான முறையிலும், காலதாமதமாக நிலையிலும் மக்களை சென்றடையும். திட்டங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளில் சிறுசிறு காரணங்களுக்காக மற்றொரு துறை தாமதம் ஏற்படுத்தி விடும். திட்ட செயல்பாடுகளில் தேக்க நிலை ஏற்படுவதோடு,  நிதிநிலையிலும் வேறு சில நிர்வாக சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றது.

எனவே துறை செயலாளர்களாகிய நீங்கள் அனைவரும் உங்கள் துறையின் திட்டங்கள் மட்டுமல்லாமல், வேறு துறையின் திட்டங்களையும் மக்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் என்ற வகையில் அணுக வேண்டும் என்று… அதன் மூலமாக முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆய்வு கூட்டத்தின் நோக்கம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் சிறப்பாகவும், செம்மையாகவும், விரைவாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை தெரிவிப்பது என்னுடைய கடமையாகும்.

உங்கள் துறையினால் மேற்கொள்ளப்பட்ட பணி, செயலாக்கத்தை பற்றி நான் தெரிந்து கொள்ள வருகின்ற அக்டோபர் மாதம் நான் மீண்டும் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்குள் அரசாணை வெளியிட்டு பணிகளை தொடங்குவதற்கான நல்ல முயற்சிகளை  நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்க்கு எப்போதும் துணையாக இந்த அரசு இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |