அக்குளில் ஏற்படும் கருமையை போக்க, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அகற்றலாம் என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்:
இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கக்கூடிய கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உடையது. கற்றாழையை நடுவே வெட்டி, அதனுள் இருக்கும் கூழை, அக்குள் பகுதியில் தடவி, 1/4 மணி நேரம் உலரவைத்துவிட்டு, பின்னர் கழுவவும். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து, கருமையை போக்கச் செய்யும் தன்மை உடையது. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் குழப்பி அக்குள் பகுதியில் தடவி, 10 நிமிடம் கழித்து சாதாரண நீரில் கழுவவும். ஒரு வாரத்திற்கு மூன்று இல்ல நான்கு முறை செய்து வரலாம்.
இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை கலந்து அக்குள் பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் தடவி மசாஜ் செய்த பின் 1/4 மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காயின் சாறை அக்குள் பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு பின் தண்ணீரால் கழுவவும். இதனை தினமும் செய்து வந்தால் அக்குள் கருமை குறையும்.
உருளைக்கிழங்கு, சருமத்தின் நிறத்தை மற்றும் தன்மை கொண்டது. அதன் தோல் நீக்கி, அரைத்து சாறு எடுக்கவும். அந்த சாறை அக்குள் பகுதியில் தேய்த்து, 1/4 மணி நேரம் கழித்து கழுவவும். உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டியும் கூட அக்குளில் தேய்த்து வரலாம்.