Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அக்குபஞ்சர் முறையில் பிரசவம்… தாயும் குழந்தையும் உயிரிழந்த பரிதாபம்…!!!

அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க நினைத்து குழந்தை இறந்து பிறந்ததால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்துள்ளனர்.

ஆனால் எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம், இயற்கையாக அக்குபஞ்சர் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை நாங்கள் தேடிக் கொள்கிறோம் என்று அழகம்மாள் கூறியுள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அழகம்மாவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவவலி வந்து உள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அதன்பிறகு அழகம்மாள் உடல்நிலை மிகவும் மோசமான தால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |