Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்கா இடுப்பில் கைக்குழந்தை…. தீயை கொளுத்திய தங்கை…. இறுதியில் நடந்தது என்ன? பதறவைத்த காரணம் ….!!

சொத்து தகராறில் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் மனைவி மயிலும் வேலைக்காக வெளியில் சென்று விட்டனர்.

அப்போது வீட்டிலிருந்த அக்கா மற்றும் தங்கைக்கு இடையே  தந்தையின் வீடு மற்றும் நிலத்தை பகிர்ந்து கொள்வது சம்மந்தமாக சண்டை வந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த சுஜாதா தன் அக்காவின் மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளார். சுமதியின் இடுப்பில் குழந்தை ஸ்ரீநிதி இருந்தும் இரக்கமில்லாமல் எரித்துள்ளார்.  மேலும் ஆத்திரம் தீராத சுஜாதா அரிவாளை எடுத்து வந்து தன் அக்காவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்ததில் சுஜாதா கையில் அரிவாளோடும், சுமதி தீப்பிடித்து எரிவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த சுமதி மற்றும் ஸ்ரீநிதி இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஜாதாவை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |