Categories
அரசியல்

அக்கம்பக்கத்துல பாருங்க…!! ஸ்டாலினுக்கு போடப்பட்ட அன்பு கட்டளை…!! ஏற்பாரா முதல்வர்….??

சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஆம் ஆத்மி கட்சியை அக்கம் பக்கத்து மாநிலங்களில் காலூன்றி வரும் நிலையில் ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திமுக ஏன் தேசிய அரசியலில் குதிக்க கூடாது என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமும் எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை திமுக மற்றும் அதிமுக என்ற இரு பெரும் கட்சிகள்தான் தமிழகத்தை தமது கைக்குள் கொண்டுள்ளன என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை தொன்றுதொட்டு காலங்காலமாக தமிழகத்தை ஆண்டு வருகிறது. காங்கிரசுக்கு தற்போது பல்வேறு சறுக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடங்கிய காலம் முதல் இந்தியா முழுவதும் தனது கொடியை நாட்டி இருந்தது.

தமிழகத்தில் காங்கிரஸ் காலடி எடுத்து வைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர் செய்த பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அவரோடு சேர்ந்து காங்கிரசும் பெயர் பெற்றது. இந்த வகையில் பெருந்தலைவர் காமராஜர் போல மற்றொரு தலைவர் என்றால் அவர் ஸ்டாலின் தான். எதிரிகளிடம் கூட பாராட்டு பெறுவது, பொறுமை, நிதானம், எடுத்த பணியில் வெற்றி காண்பது உள்ளிட்ட பல்வேறு குணங்களால் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களின் மனதில் பல படி முன்னேறி இருக்கிறார். இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வர் என பலதரப்பட்ட ஊடகங்களாலும் பாராட்டப்பட்டு வருகிறார் ஸ்டாலின்.

ஆம் ஆத்மி கட்சியால் ஒரு தேசிய கட்சியாக உருவாக்க முடியும் என்றால் அதைவிட பல மடங்கு மக்கள் சக்தியும் ஆளுமைத் திறனும் கொண்ட திமுகவால் ஏன் தேசியவாத கட்சியாக மாற முடியாது என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. இந்திய தேசம் முழுவதையும் ஆட்சி செய்யும் திறமை திமுகவுக்கு உள்ளது. அவ்வாறு இருக்கையில் திமுக ஏன் தேசிய அரசியலுக்குள் நுழைய கூடாது என்ற கேள்வி தற்போது முதல்வர் காதுகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அவர் இதற்கு விரைவில் நல்ல பதில் அளிப்பார் எனவும் அவரின் நலம் விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |