கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் பொதுத்தேர்வை ரத்து செய்து வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று அறிவித்தது.
இன்னியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வைப் போல நீட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்து; குழு பரிந்துரையின் படி வழங்கும் மதிப்பெண்களை கொண்டு உயர்கல்வி சேர்க்கை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.