ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தால் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைபடி வழங்கப்படுகின்றது. பொதுவாக ஏழாவது ஊதிய குழுவின் படி மத்திய ஊழியர்களின் டிஏ வருடத்திற்கு இருமுறை அதிகரிக்கப்படுகின்றது. அதாவது முதலில் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் உயர்த்தப்படும் டி ஏ இன் உயர்வு முந்தைய ஆறு மாதங்களுக்கான Aicpi குறியீட்டைப் பொறுத்து மாறுபடுகின்றது. முக்கிய ஆதாரங்களின் மூலம் மத்திய அரசு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியைச் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த முறை அகவிலைப்படி நான்கு சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 34 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் அகவிலைப்படி 34 இல் இருந்து 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முறை அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் உயர்விற்கு பின் 34 இல் இருந்து 38 சதவிகிதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அகவிலைப்படி 38 சதவீதம் அதிகரிக்கப்பட்டதன் மூலமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல ஏற்றம் ஏற்படுகின்றது.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஜூலை மாதத்திற்கான ஏ ஐ சி பி ஐ இன்டெக்ஸ் தரவை வெளியிட்டு இருக்கிறது மற்றும் ஜூலை 2022 காண அகில இந்திய சிபிஐ டபிள்யூ 0.7 புள்ளிகள் அதிகரித்து 129.9 புள்ளிகள் ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வானது ஜூன் 2022ல் 129.2 புள்ளிகளுடன் ஒப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஏ ஐ சி பி ஐ குறியீட்டின்படி இந்த உயர்வானது அடுத்த வருடம் ஜனவரியில் ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்க வழிவகுத்து இருக்கின்றது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு தரவை பொறுத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான விலைப்படி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.