திரைப்படத் தயாரிப்பாளர் அன்புசெழியனின் மகளுக்கு நடிகர் கமலஹாசன் காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அன்பு செழியன் என்பவர் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த பிரபல ஃபைனான்சியரும் , திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவரது மகள் சுஷ்மிதாவுக்கும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநருமான சரணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 21-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிரபலங்களான ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன், பாரதிராஜா, வைரமுத்து, பிரபு என பலரையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமலஹாசனை மணமக்களான சுஷ்மிதாவும் சரணும், அன்புசெழியன் உடன் சேர்ந்து நேரில் சென்று திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கமலஹாசன் இருவருக்கும் காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் திருமணத்திற்கு கண்டிப்பாக வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது நடிகர் கமலஹாசனை மணமக்கள் நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.