Categories
அரசியல்

ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. வட்டி விகிதத்தில் திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும், பழைய திட்டங்களை புதுப்பிப்பவர்களுக்கு இந்த புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும்.

பணத்தை டெபாசிட் செய்த 7 நாட்களுக்குள் பணத்தை எடுத்து விட்டால் வட்டி செலுத்தபடாது. 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் திட்டங்களுக்கு புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 16-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்களுக்கு மற்றும் 2 கோடி முதல் 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்களுக்கும் நவம்பர் 29ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமல்படுத்தப்பட்டது.

புதிய வட்டி விகிதம் (ரூ.2 கோடிக்கு உட்பட்ட டெபாசிட்):

7 – 14 நாட்கள் : 2.50%

15 – 29 நாட்கள் : 2.50%

30 – 45 நாட்கள் : 3%

46 – 60 நாட்கள் – 3%

61 – 90 நாட்கள் – 3%

91 – 120 நாட்கள் – 3.50%

121 – 150 நாட்கள் : 3.50%

151 – 184 நாட்கள் : 3.50%

185 – 210 நாட்கள் : 4.40%

211 – 270 நாட்கள் : 4.40%

271 – 289 நாட்கள் : 4.40%

290 நாட்கள் – 1 ஆண்டு : 4.40%

1 ஆண்டு – 389 நாட்கள் : 4.90%

390 நாட்கள் – 15 மாதங்களுக்குள் : 4.90%

15 மாதம் – 18 மாதம் : 4.90%

18 மாதம் – 2 ஆண்டு : 5%

2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டுகள் – 5.15%

3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டுகள் – 5.35%

5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டுகள் – 5.50%

Categories

Tech |