Categories
அரசியல்

ஃபிக்சட் டெபாசிட் வட்டியை குறைத்த ஐசிஐசிஐ வங்கி….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை தற்போது குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் பிக்சட் டெபாசிட் வட்டியை குறைந்து வரும் நிலையில் தற்போது ஐசிஐசிஐ வங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. பொது வாடிக்கையாளர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் கள் இரு தரப்பினருக்கும் புதிய வட்டி விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புதிய வட்டி விகிதம்:

7 – 14 நாட்கள் : 2.50%

15 – 29 நாட்கள் : 2.50%

30 – 45 நாட்கள் : 2.75%

46 – 60 நாட்கள் : 2.75%

61 – 90 நாட்கள் : 3%

91 – 120 நாட்கள் : 3.35%

121 – 150 நாட்கள் : 3.35%

151 – 184 நாட்கள் : 3.35%

185 – 210 நாட்கள் : 3.60%

211 – 270 நாட்கள் : 3.60%

271 – 289 நாட்கள் : 3.70%

290 நாட்கள் – 1 ஆண்டு : 3.70%

1 ஆண்டு – 389 நாட்கள் : 4.15%

390 நாட்கள் – 15 மாதம் : 4.15%

15 மாதம் – 18 மாதம் : 4.20%

18 மாதம் – 2 ஆண்டுகள் : 4.30%

2 ஆண்டுகள் – 3 ஆண்டுகள் : 4.50%

Categories

Tech |