Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஃபால்ஸ் சீலிங் விழுந்து…. அம்மா மெஸ்ஸில் விபத்து….  காஞ்சிபுரத்தில் பரபரப்பு ….!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் வெப்பத்தை தவிர்க்க அமைக்கப்பட்டிருந்த ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்து சேதம் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தலைமை மருத்துவமனை அருகே நகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அதிகாலை ஆறு மணி முதல் மாலை மூன்று மணிவரை செயல்படும். அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகள்,  நோயாளிகளுடன் வருவோர் மற்றும் அப்பகுதி ஏழை மக்கள் அந்த உணவகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், உணவகத்தில் வெப்பத்தை தவிர்க்க அமைக்கப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்னும் கலவை உதவியுடன்  ஃபால்ஸ் சீலிங்  அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் ஃபால்ஸ் சீலிங் மற்றும் அதனுடன் அமைக்கப்பட்டிருந்த மின் விசிறிகள் அனைத்தும் கீழே விழுந்து சேதமடைந்தன. அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றதால்,  நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது,  ஆறுதலை அளித்துள்ளது .

Categories

Tech |