பலூடா வாங்கித் தருகிறேன் என்று கூறி சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் .
மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பெயரில் 30 வயதான நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்து பிரிவு 354a இன் கீழ் பாலியல் தீண்டல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாலியல் குற்றச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 24 ,31 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது . அதுமட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நெருங்கிய உறவினர் ஆவார்.
ஃபலூடா வாங்குவதற்கு ரூபாய் 50 தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சிறுவனை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து பயந்தபடியே வீட்டுக்கு சென்று அந்த சிறுவன் தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் காவல்துறைக்கு புகார் அளித்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 9 வயது சிறுவன் மட்டுமல்லாமல் 8 முதல் 12 வயது வரை உள்ள மேலும் மூன்று சிறுவர்களுக்கு அவர் இதுபோன்று பாலியல் தொந்தரவுகளை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.